நாடக கலைஞர்களுக்கு சிறிய அளவில் தளர்வு.! அரசிடம் நாடக நடிகர்கள் அதிரடி கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடக நடிகர்கள் சங்கத்தினர் நாடகம் நடத்த அனுமதி வேண்டி மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், "அவர்கள் கூறியிருப்பது கரூர் மாவட்டத்தில் 475 பேர் நாடக நடிகர் சங்கத்தில் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் நாடகம் நடத்தி கிடைக்கின்ற வருவாயில் தான் எங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றோம். 

தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் நாடகம் நடத்த முடியாத நிலையில் இருக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நலிந்து போய் முடங்கி இருக்கிறோம். 

கோவில் திருவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு ரத்து செய்து இருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் தளர்வு வழங்க வேண்டும். சமூக இடைவெளி உட்பட அனைத்து கொரோனா விதிகளையும் கடைப்பிடித்து நாங்கள் நாடகத்தை நடத்திக் கொள்வோம். அத்துடன் அரசு கடனுதவி அளிக்க நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Therukoothu actors request to govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal