அவர்களுடன் கூட்டணி இல்லை.. நான்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்.. விஜய் மீண்டும் திட்டவட்டம்!
There is no alliance with them I am the chief minister candidate Vijay is once again determined
அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம்என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள தயாராகிறார் விஜய்.அதுமட்டுமல்லாமல் அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் விஜய் தெரிவித்திருந்தார்.மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தார்.தற்போது முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் சமரசம் கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி, தனித்து போட்டியிட உள்ளார்.
இதன்படி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முழுவீச்சில் தயாராகி வரும்நிலையில், மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் விஜய் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கலந்துரையாடிய போது விஜய் கூறியதாவது:-
மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
There is no alliance with them I am the chief minister candidate Vijay is once again determined