இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
There is a possibility of heavy rain for the next 3 days starting today
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில தினங்களாக ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யத் தொடங்கியிருப்பதால் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இதுதவிர, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.வழக்கத்தைவிட முன்னதாக மே 24- பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
There is a possibility of heavy rain for the next 3 days starting today