#BREAKING : தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரியை அடுத்த கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 2,648 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

எனவே தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக அளவு தண்ணீர் செல்வதால் தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கடந்து மறுகரைக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenpennai river flood alert for 5 district


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->