தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Thenkasi School College leave
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். ஆனால், அவசர சேவைகளை மேற்கொள்ளும் மாவட்டத் தணிக்கைத் துறை மற்றும் சார்நிலை அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறைக்கு மாற்றாக ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thenkasi School College leave