மெசெஞ்சரில் சேஷ்டங்கள்... நேரில் டவுசருடன் வந்தவனை..., பேஸ்புக் ராஜா, காலில் விழுந்து கதறிய சிறப்பான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


முகநூலில் ராஜா என்ற பெயர் கணக்கு வைத்துள்ள நபர் ஒருவர், பெண்களின் பெயரில் உள்ள கணக்குகளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முகநூலில் அழைப்பு விடுவது, பின்னர் ஆபாசமாக பேசுவது, ஆபாசப் படங்களை அனுப்புவது என பல சேட்டைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

அந்த வகையில், திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, திண்டுக்கல்லை சார்ந்த பெண், தனது தோழியான தேனி மாவட்டம் பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழரசியிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ராஜாவின் முகநூல் கணக்கில், மெசஞ்சர் மூலம் தமிழரசியிடம் எந்த ஊர்? என்று விசாரிக்கவே, ராஜா தனது வழக்கமான ஆபாசமான சேட்டைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். இதன்பின்னர், தமிழரசி கொஞ்சுவது போல பேசி, நேரில் சந்தித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாக கூறி எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். 

ராஜாவும் உப்புக்கோட்டை கிராமத்திற்கு தமிழரசியை வரச்சொன்ன நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார். காம ஆசையில் வேகமாக வந்த ராஜாவை, கையும் களவுமாக பிடித்த தமிழரசி வீதியில் வைத்து அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர் தாய் மற்றும் தந்தையை அழைத்துவர சொல்லி மிரட்டல் விடுக்கவே, அக்கம்பக்கத்தினரும் தங்கள் பங்கிற்கு ராஜாவை அடித்துவிட்டு சென்றனர். 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தமிழரசி முடிவு செய்துள்ள நிலையில், " ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வீடியோ இருப்பதாக யாரும் கூறினால் அல்லது மிரட்டினால், ஆபாசமாக புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், தகுந்த நடவடிக்கையை காவல் துறையினர் எடுத்துக்கொள்வார்கள் " என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Facebook Raja Sexual Torture Girl Warning Hardly Culprit Cried


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal