3 வயது சிறுமியின் உடலில் கடித்த காயங்கள்.. அலறிக்கொண்டு ஓடிய தாய்.. தேனியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சார்ந்தவர் சிங்கராஜா. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 23 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து, 3 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. 

அந்த பெண்மணி திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிங்கராஜா தனது முதல் மனைவியை கைவிட்டு, கள்ளத்தொடர்பு கொண்ட பெண்ணை கரம்பிடித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து தனியாக வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.  

இந்நிலையில், இளம்பெண் வீட்டில் இருந்து இரத்த காயத்துடன் அலறியடித்து வெளியே வந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.

சிங்கராஜா காமவெறியில் தனது இரண்டாவது மனைவியை உல்லாசத்திற்கு அழைக்கவே, இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் காமுக மோகத்தில் ஆத்திரமடைந்த காமுக கொடூரன் பெண்ணை கண்மூடித்தனமாக அடித்துள்ளான். மேலும், வெறி தீராது சுவற்றில் மோத வைத்ததில் மண்டையில் இரத்தம் வழிந்துள்ளது.

3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ள நிலையில், குழந்தையின் உடலில் கடித்த காயமும் இருந்துள்ளது. இதனால் தன் குழந்தையின் உயிர் மற்றும் தனது உயிரை காக்கும் பொருட்டு தாய் வீட்டினை விட்டு வெளியே வந்தது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் சிங்கராஜாவை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni child sexual torture murder attempt police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal