மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்... அடுத்து நடந்த கொடூரம்!
The young man who took the student for enjoyment the cruelty that followed
தனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மாணவியை மிரட்டி பலமுறை மாணவியை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கோவையை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனுஷ், அந்த மாணவியை கோவையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு அதை மாணவியிடம் காண்பித்து தனுஷ் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு தொடர்ந்து தனுஷ், தனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மாணவியை மிரட்டியுளளார். இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை படிக்க வேண்டாம் என்று கூறி கோவையில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற தனுஷ் , மாணவியை தேடி நெய்வேலிக்கு வந்து மாணவியிடம் பாலியல் பலாத்கார வீடியோவை காண்பித்து உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தனுஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலையில் குத்தினார். இதை தடுத்த அக்காளுக்கு கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The young man who took the student for enjoyment the cruelty that followed