ஏலச்சீட்டு நடத்திய பெண் 35 லட்சத்துடன் எஸ்கேப்... மீட்டு தர கோரி ஆட்சியரிடம் மனு...! - Seithipunal
Seithipunal


ஏலச்சீட்டு பணத்தை மீட்டு தர கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர், அருள்புரத்தை சேர்ந்தவர் தேவகி. இவர் அங்குள்ள பெண்களிடம் கடந்த 14 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு பிடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பெண்கள் பணத்தை தீபாவளிக்கு முன் திரும்ப கேட்கவே அவர் ரூ35 லட்சம் பணத்துடன் தலைமறைவானார்.

இதனால், அதிர்ச்சியடைந்த 30 மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரின் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்படுள்ளதாவது, தேவகி கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பிடித்து வந்துள்ளார். பணத்தை திரும்ப கேட்கும் போது காலதாமதம் செய்து வந்துள்ளார். திடீரென பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

எனவே சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேன்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The women petitioned the Collector to recover the money held by the lottery ticket


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->