நெல்லையில் திருட வந்த வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை; "எதற்கு இத்தனை கேமரா போங்கடா வெண்ணைகளா:'' நான்கு பக்கத்தில் கடிதம் எழுதிய திருடன்..!
The thief wrote a four pages letter because he didnt have a single rupee in the house he came to rob
நெல்லையில், திருட சென்ற வீட்டில் ஒரு ரூபாய் கூட காசு இல்லை என்பதால் வீட்டின் உரிமையாளருக்கு, திருட வந்த நபர், 04 பக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பால் என்பவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக குடும்பத்தோடு மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த பீரோவினை உடைத்து நகை பணம் உள்ளதா என்று தேடிப் பார்த்தபோது எதுமே இல்லாமால் இருந்துள்ளது. குறித்த வீட்டில் இருந்த வெறும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உண்டியல் மட்டுமே இருந்துள்ளது. இதனை திருடிக்கொண்ட அவர், கடைசியாக வீட்டு உரிமையாளருக்கு, நான்கு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அந்த கடிதத்தில் அந்த திருடன் குறிப்பிட்டுள்ளதாவது: "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம் காசு வைக்கவும்; எதற்கு இத்தனை கேமரா போங்கடா வெண்ணைகளா.. என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன்" என எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The thief wrote a four pages letter because he didnt have a single rupee in the house he came to rob