அதல பாதாளத்துக்கு சரிந்த கிரிப்டோகரன்சி பங்குகள்: 01 பில்லியன் டாலரை இழந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல்,  கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அமெரிக்க அரசின் ஆதரவால், பலரும் அதில் அதிகளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவாக, இதுவரை இல்லாத அளவிற்கு கிரிப்டோகரன்சி உச்சத்தைத் தொட்டு வரலாறு கண்டது. 

ஆனால், கடந்த சில நாட்களாக அதன் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. பிட்காயின் தொடங்கி எல்லா கிரிப்டோவும் சரிய ஆரம்பித்துள்ளது. அதாவது, செப்டம்பர் மாதத்திலிருந்து அமெரிக்கன் பிட்காயின் கார்ப்பரேஷனின் பங்குகள் 50%க்கும் மேல் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சரிவு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தின் செல்வத்திலிருந்து $300 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் குறைந்துள்ளதால், ட்ரம்பின் குடும்பத்திற்கு  பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது,  1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இது ரூ.9,800 கோடிக்கு மேல்) ட்ரம்ப் குடும்பம் இழந்துள்ளது. 

செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் $7.7 பில்லியனாக இருந்த ட்ரம்ப் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு, இப்போது ஒரே மாதத்தில் $6.7 பில்லியனாக குறைந்துள்ளது. மீம்காயின்கள் மற்றும் ட்ரம்ப் முதலீடு செய்திருந்த கிரிப்டோ மதிப்பு சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சரிவின் பெரும்பகுதி ட்ரம்ப் குடும்பத்தினரின் அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் சொத்துக்களின் வெளிப்பாட்டுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே ’ட்ரம்ப் மீம் காயின்’ என்ற தனது சொந்த கிரிப்டோவை வெளியிட்டார். இருப்பினும், அதன் மதிப்பு சமீபத்தில் சுமார் 25% வரை சரிந்தது.

அதேபோல ட்ரம்பின் மகனான எரிக் ட்ரம்ப் பிட்காயின் மைனிங் செய்யும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். அதன் மதிப்பு உச்சத்திலிருந்து கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்துள்ளது. மேலும், ட்ரம்பின் மற்றொரு நிறுவனமான ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப், கிரிப்டோ நிதியை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதன் பங்குகளும் கடுமையாகச் சரிந்துள்ளது. 

இது தவிர, ட்ரம்ப் குடும்பத்தினர் தங்கள் கிரிப்டோ முயற்சிகளில் பெருமளவில் இழந்தது மட்டுமல்லாமல், அவரது பெயரில் முதலீடு செய்வதன் மூலம் பணக்காரர் ஆகலாம் என்று நம்பிய பலரும் ஏமாற்றத்தைச் சந்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஜனவரி மாதத்தில் 'ட்ரம்பின் மீம்' நாணயத்தை அதன் உச்சத்தில் வாங்கிய முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்திற்குள் தங்கள் முதலீட்டின் முழு மதிப்பையும் இழந்திருப்பார்கள் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த சரிவு கிரிப்டோகரன்சி முதலீடுகளுடன் தொடர்புடைய நிலையற்ற தன்மை மற்றும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறதக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிரிப்டோ சந்தை சரிவுகளுக்கு மத்தியிலும், தான் தளர்ந்து போகாமல் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகக் தம்மின் மகன் எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US President Trump loses $1 billion due to the collapse of cryptocurrency stocks


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->