ஆண்டிபட்டி சாதனை மாணவிக்கு குவியும் பாராட்டு.!
The student from Andipatti receives overwhelming praise
எதிர்காலத்தில் நல்லமுறையில் படித்து மாவட்ட ஆட்சியராக வந்து பொதுமக்களுக்கு சேவை புரிவதே தனது லட்சியம் என்று 10 வது அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த மாணவி அனுஷ்கா தெரிவித்தார்.
10 வது அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடமும், தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற மாணவிக்கு கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து, சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதியின் 2 வது மகள் அனுஷ்கா.
தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த இவர் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலஅளவில் நான்காம் இடமும், தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் (496/500) பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மாணவிக்கு பாப்பம்மாள்புரம் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து மூன்றாவது வார்டு கவுன்சிலர் பாலமுருகன், பகவதி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஷ், காந்தி நகர் நல கமிட்டி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பொன் ராஜா ,சுந்தரமூர்த்தி, செல்வம், பாலமுருகன், சக்திவேல் உள்பட பலர் அவரது வீட்டிற்கு வந்து, மாணவியை வாழ்த்தி சால்வை அணிவித்து, நினைவுப்பரிசை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி அனுஷ்கா கூறும்போது எதிர்காலத்தில் நல்லமுறையில் படித்து மாவட்ட ஆட்சியராக வந்து பொதுமக்களுக்கு சேவை புரிவதே தனது லட்சியம் என்று தெரிவித்தார்.
English Summary
The student from Andipatti receives overwhelming praise