முதல் பெண் அமைச்சர்திருமதி.ருக்மிணி லட்சுமிபதி அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர் மற்றும் முதல் பெண் அமைச்சர்திருமதி.ருக்மிணி லட்சுமிபதி அவர்கள் நினைவு தினம்!.

 ருக்மிணி லட்சுமிபதி (Rukmini Lakshmipathi, டிசம்பர் 6, 1892 – ஆகஸ்ட் 6, 1951) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனையும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதியும், வீணை இசைக்கலைஞரும் ஆவார். இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார்.

 ருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 

1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான். 1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொது சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் இவர் மட்டும் தான். சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The remembrance day of the first woman minister Mrs Rugmini Lakshmipathi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->