விவசாயிகளுக்கான உற்பத்தி மானிய தொகை.. முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்!
The production subsidy amount for farmers was provided by Chief Minister Rangasamy
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு பயிர் உற்பத்தி மானிய தொகையினை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு 1813.85 ஏக்கரில் 991 பொதுப் பிரிவு விவசாயிகள் பயிர் செய்த பயறு வகை பயிர்களுக்கு உண்டான பயிர் உற்பத்தி மானிய தொகை ஏக்கருக்கு ரூ. 4000/- என்றளவில் ரூ.72,55,400/- மற்றும் 1881.21 ஏக்கரில் 1231 பொதுப் பிரிவு விவசாயிகள் பயிர் செய்த பருத்திக்கு உண்டான பயிர் உற்பத்தி மானிய தொகை ஏக்கருக்கு ரூ.10,000/- என்றளவில் ரூ.1,88,12,100/- என மொத்தம் ரூ. 2,60,67,500/-க்கான காசோலையையும், முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார்.
அது போல, 155.85 ஏக்கரில் 123 அட்டவணை பிரிவு விவசாயிகள் பயிர் செய்த பயறு வகை பயிர்களுக்கு உண்டான பயிர் உற்பத்தி மானிய தொகை ஏக்கருக்கு ரூ 5000/- என்றளவில் ரூ 7,79,250/-;
257.74 ஏக்கரில் 210 அட்டவணை பிரிவு விவசாயிகள் பயிர் செய்த பருத்திக்கு உண்டான பயிர் உற்பத்தி மானிய தொகை ஏக்கருக்கு ரூ 11,000/- என்றளவில் ரூ 28,35,140/- க்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 5,000/- என்றஅளவில் 24 விவசாயிகளுக்கு 15.96 ஏக்கர் சாகுபடி பரப்புக்கு ரூ. 79,800/-; 4.91 ஏக்கர் பரப்பில் வீரிய ஒட்டு ரக காய்கறி பயிர் சாகுபடி செய்த 8 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 4000/- என்ற அளவில் ரூ.19,640/-; தரிசில் 7.70 ஏக்கரில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்த 10 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 6250/- என்ற அளவில் ரூ 48,125/-; 6.45 ஏக்கரில் நாட்டு காய்கறி வகைகளை சாகுபடி செய்த 13 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 5000/- என்ற அளவில் ரூ 32,250/- என மொத்தம் ரூ 2,610 விவசாயிகளுக்கு ரூ. 2,98,61,705/- அளவிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
English Summary
The production subsidy amount for farmers was provided by Chief Minister Rangasamy