சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா காலம் முடிந்த பின்பும் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான அனைத்து மாநிலங்களும் சட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, விசா முடிந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

அவர்களை உடனடியாக வெளியேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

குறித்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம். க்யூ பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் பாகிஸ்தானியர்கள் மட்டும் அல்லாமல், வங்கதேசத்தினர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விசா முடிந்தும் தங்கி இருப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களை அடையாளம் கண்டு, எப்படி வெளியேற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The process of deporting illegal immigrants has begun in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->