உல்லாசத்திற்கு அழைத்த பூசாரி: கடைசியில் நடந்த பரபரப்பு!
The priest who invited for the celebration The commotion that happened in the end
இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த பூசாரி கோவிலுக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காந்திவிலி கணேஷ் நகர் லால்ஜிபாடா பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் 52 வயது நபர் ஒருவர் பூசாரியாக செயல்பட்டு வந்தார் . அப்போது கோவிலுக்கு வழக்கமாக வரும் ஒரு 19 வயது இளம்பெண்ணிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் பூசாரி செல்போன் நம்பரை வாங்கி வைத்திருந்தார். இந்தநிலையில் பூசாரி கடந்த 19-ந்தேதி இரவு 10.30 மணி அளவில் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் தன்னிடம் பாலியல் உறவுக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இதுபற்றி அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் அதிகாலை 2 மணி அளவில் தனது மகளை காந்திவிலி போலீஸ் நிலையம் அழைத்து சென்று பூசாரிக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் காலையில் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணைக்காக பூசாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் கோவிலுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The priest who invited for the celebration The commotion that happened in the end