"மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை காவல்துறை" – அண்ணாமலை கண்டனம்!
"The police are not under M K Stalins control Annamalais condemnation
திருப்புவனத்தில் காவல்துறையால் அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் மறையாத நிலையில், சென்னை கொளத்தூரில், தனியார் பால் நிறுவன ஊழியர் நவீன் மரணம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில் கூறியதாவது:நவீன் மீது, பண மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையர் பாண்டியராஜனே நேரடியாக விசாரித்தது சந்தேகம் உருவாக்குகிறது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, நவீன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதும், பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் இருப்பதும் கேள்விகள் எழுக்கும் நிலை.இது, காவல்துறை மீண்டும் சட்டத்தை மீறிச் செயல்படுவதை நிரூபிக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.நவீன் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்,இருவருக்கும் நீதிகேட்கும் வகையில், துணை ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
"The police are not under M K Stalins control Annamalais condemnation