நேஷனல் ஹெரால்டு வழக்கு..மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்!  - Seithipunal
Seithipunal


சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக சட்டத்திற்கு புறம்பாக நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை கையகப்படுத்த முயற்சிப்பதோடு சோனியா காந்தி மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  நகரத் தலைவர் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றார். மாநிலச் செயலாளர்  யு.அஸ்வின் குமார் முன்னிலை வகித்தார். 

இதில் மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாநில நெசவாளர் அணி தலைவர் சுந்தரவடிவேல், மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், மாவட்ட மூத்த துணை தலைவர் தளபதி மூர்த்தி,  மாவட்ட தலைவர்  ஆர்.எம்.தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர்  டி.ரமேஷ்,மாநில சொல்லார் ஆர்.ஆர். சாந்தகுமார், மாவட்ட முதன்மை துணை தலைவர் சதா.பாஸ்கரன்,மாவட்ட பொருளாளர் கிளாம்பாக்கம் யு. சிவகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், மற்றும் ஜி.குமார், தீனாள் அச்சுதன், மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் டி.பாபுராம்,  கருட ஆரல், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், சரஸ்வதி, தியாகு, ஸ்டாலின், சுஜித், வட்டாரத் தலைவர்கள் புருஷோத் முகுந்தன், பொன்னேரி மற்றும் மீஞ்சூர் நகரத் தலைவர் மதன், நகர நிர்வாகிகள் விஜய், பாலாஜி, அன்சார், மதுசூதனராவ்,ராமுலு,சுரேஷ்,சேகர்,இமயவரம்பன்,வெங்கடேசன்,ஏ.பி.சங்கர்,ரஜினி, வேல்முருகன், நித்தியானந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The National Herald case Congress to protest against Centres government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->