குறிப்பாணையை திரும்ப பெற வேண்டும்..பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
The memorandum must be withdrawn A letter to the Chief Minister MK Stalin
சுரங்கத் திட்டங்களுக்கு கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்து குறிப்பாணையை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்த குறிப்பாணையை திரும்ப பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் குறிப்பாணை (08.09.2025):
அணு கனிமங்கள், அரிய மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு.குத்தகைப் பகுதி எவ்வளவு இருந்தாலும், மத்திய அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவு.
தமிழ்நாட்டின் கடலோரங்களில் அரிய மண் கனிமங்கள் அதிகம்; அவை சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா போன்ற கடற்கரைகள் ஆமை இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றின் தாயகம்.
இவை பல்லுயிரியலைக் காக்கின்றன; கடலரிப்பு, சூறாவளிக்கு இயற்கைக் கேடயமாக செயல்படுகின்றன.
இத்தகைய பகுதிகளில் சுரங்கம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அதிகரிக்கும். எனவே, உள்ளூர் சமூகங்களின் பங்கேற்பு மிக அவசியம்.
1994 EIA அறிவிப்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கட்டாயமாக்கப்பட்டது; 2006-ல் இது மேலும் வலுப்படுத்தப்பட்டது.பொது கருத்துக் கேட்பை விலக்கு அளிப்பது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும்.
சுப்ரீம் கோர்ட்டின் Alembic Pharmaceuticals Ltd. v. Rohit Prajapati & Ors. (2020) தீர்ப்பை சுட்டிக்காட்டி, அலுவலகக் குறிப்பாணைகள் மூலம் EIA விதிகளை மாற்ற முடியாது என வலியுறுத்தினார்.
08.09.2025 குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.இத்தகைய முக்கிய கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.மாநில அரசுகள், பொதுமக்கள் ஆலோசனையுடன் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
தமிழ்நாடு எப்போதும் நாட்டின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்புத் தேவைகளுக்கும் பங்களிக்கும் உறுதிப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய சுரங்கத் திட்ட விலக்கு சுற்றுச்சூழல், பல்லுயிரியல், உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தானது என ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென அவர் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The memorandum must be withdrawn A letter to the Chief Minister MK Stalin