மாணவியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது!
The laborer who impregnated the student was arrested
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லலாம், தினசரி நாளிதழை எடுத்து பார்க்கும் போது அதில் பாலியல் தொடர்பான செய்திகள் தான் அதிகம் உள்ளது, குறிப்பாக பெண்களை வசியப்படுத்தி ஆண்கள் தங்கள் வலையில் சிக்க வைப்பதுடன் ஆசை வார்த்தைகளை வாரி விட்டு அவர்களை பலாத்காரம் செய்து பின்னர் ஏமாற்றி விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உறவுக்கு உட்படுத்தி அவர்களை திருமணம் செய்யாமல் சில ஆண்கள் ஏமாற்றிவருவது தொடர்கதையாக உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி விஷ்ணு அதே பகுதியில் 65 வயது மூதாட்டிக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார்.அந்த மூதாட்டியின் பேத்தி 17 வயது சிறுமிவீட்டில் இருந்தார். அப்போது அடிக்கடி வீட்டுக்கு சென்ற அந்த சிறுமிக்கும், தொழிலாளி விஷ்ணுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் மாணவி வயிறு வலிப்பதாக பாட்டியிடம் கூறியதையடுத்து பேத்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது .
பிறகு சிறுமிடம் விசாரித்த போது, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 3 நாட்கள் விஷ்ணு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பாட்டி புகார் அளித்ததன்பேரில் விஷ்ணு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The laborer who impregnated the student was arrested