கனிமவள கொள்ளையை தடுக்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்!
The Indian United Communist Party protests to stop the mining of minerals
ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி பகுதியில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக புகார் கூறியும் , பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் கூறியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் ஆர்ப்பாட்டம் செய்தனர் .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு லஞ்சமாக பணம் பெற்று முறைகேடு செய்வதாக புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,
ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக ஏராளமான அளவிற்கு கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் கூறியும், அதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,
அதற்குரிய புகார்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் ஆண்டிபட்டி வருவாய்துறையினரை கண்டித்தும்,
ஆண்டிபட்டி தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும்,விவசாயிகளின் நிலத்தை சர்வே செய்ய ஆண்டிபட்டி வரவாய்துறையினர் மற்றும் சர்வே துறையினர் ஆயிரக்கணக்கில் கட்டாய லஞ்சம் பெறுவதை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை விளக்கி தேனி மாவட்ட துணைச் செயலாளர் அபு தாஹிர் விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
English Summary
The Indian United Communist Party protests to stop the mining of minerals