பைக் திருடு போனதால் போலீசில் புகார் அளித்த பெண்: லாட்ஜ்க்கு வர சொன்ன காவலர்: அங்கு அரங்கேறிய சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் கடந்த மாதம் தனது கணவரின் பைக் திருடு போனதாக ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி குற்றப்பிரிவு போலீஸ் காவலராக பணியாற்றி வரும் திருப்பத்தூரை சேர்ந்த 42 வயதுடைய ஹரிதாஸ் உள்ளிட்ட போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

பின்னர் ஆவடி பகுதியில் அந்த பைக் மீட்கப்பட்டு இளம்பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட காவலர் ஹரிதாஸ் பேசியுள்ளார். அப்போது அவர், அந்த இளம்பெண்ணிடம் உங்களின் பைக்கை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறோம். அதனால் என்னை பார்த்து கவனியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு குறித்த பெண், கவனியுங்கள் என்றால் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு காவலர் ஹரிதாஸ், 15ஆயிரம் கொடுங்கள் போதும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என தெரிவிக்க, இதையடுத்து காவலர் ஹரிதாஸ் அந்தப் பெண்ணிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

அதற்கு காவலர் ஹரிதாஸ் பணம் இல்லை என்றால் பரவாயில்லை. நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆவடியில் குறிப்பிட்ட லாட்ஜ்க்கு வருமாறு அழைத்த்துள்ளார். இதனில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இளம் பெண்ணின் உறவினர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தபடியே குறிப்பிட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு காத்திருந்த காவலர் ஹரிதாசை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிதாசை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளதோடு, ஹரிதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The guard told the woman who had filed a complaint with the police about her bike being stolen to come to the lodge


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->