அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயா்த்த இலக்கு.! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் எண்ணிக்கை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான 'பிக்மி 2.0' இணையதளத்தில் பேரு காலத்தை சுயமாக பதிவுசெய்து பதிவெண் பெறும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, கர்ப்பிணிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகை தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகள் 76.1 சதவீதத்திலிருந்து , 90.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கும், 10.21 லட்சம் கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 75 ஆயிரம் முதல் 81 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 60 சதவீத பிரசவங்கள் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

அடுத்த இரு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The goal to Government hospital deliveries increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->