நிவாரண உதவியை புறக்கணித்த மீனவர்கள்... ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் குழாய்களை வெளியே எடுத்து பாதித்த மீனவர்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்  என சுற்றுச்சூழல் அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள சொலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் என்ற தனியார் மருந்து தொழிற்சாலையின் கடலில் துண்டித்து விடப்பட்ட கழிவு நீர் குழாயால் மீனவர்களின் வலை பாதித்த மீனவர்கள் புகார்  காரணமாக சுனாமி குடியிருப்பு மக்கள் நலச்சங்கம்  சார்பில் சென்னை தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2023 ல் வழக்கு எண் 189/ 2023 வழக்குத் தொடர்ந்து,  22-01- 2025 அன்று வழக்கின் தீர்ப்பில் மூன்று மாதத்தில் கடலில் உள்ள கழிவு நீர் குழாய்களை வெளியே எடுக்கவும், வலை இழந்த மீனவர்களுக்கு பத்து  லட்சம் இழப்பீடு வழங்கவும் 07-04-2025 முன்பாக எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடவும் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது. ஆனால்  உத்தரவின் கடந்த ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வலை இழந்த மீனவர்கள் கடந்த 21-03- 2025 ல் இழப்பீடு கேட்டு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறைக்கு  கடிதம் அளித்துள்ளனர். 


 தீர்ப்பின்படி அதிகாரிகள் காலத்தோடு  நடவடிக்கை எடுக்காததால் இதனைப் பயன்படுத்தி காலாப்பட்டில்  சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு கிராம பஞ்சாயத்து என்ற பெயரில் சங்க நிர்வாகிகளை கொலை மிரட்டல் விடுத்தும், தீர்ப்பாய உத்தரவுபடி குழாய்களை வெளியே எடுக்காமல் இருக்க, கம்பெனியில் சிலர் உத்தரவை, 50 லட்சத்திற்கு  பேரம் பேசி வருகின்றனர். 

 இந்த நிலையில் நேறறு 24 தேதி குழாயில் வலை பாதித்த 11 மீனவர்களுக்கு  தலா  ரூ 10 ஆயிரம் வழங்க சட்டசபைக்கு 25 தேதி காலை வருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளால்  தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கு வலை இழந்த மீனவர்கள்  ஒரு லட்சம் மதிப்பிலான பெரிய வலைக்கும் பத்தாயிரம் நிவாரணம் என்பது சரியானது அல்ல, வலை பாதிப்பு அதனால் தொழில் இழப்பு கணக்கிட்டு நாங்கள் ஒரு தொகையை கேட்டுள்ளோம். அந்த தொகையை வழங்காமல் சராசரியாக தலா 10 ‌ ஆயிரம்  நிவாரண உதவி வேண்டாம் என மீன்வளத்துறை துணை இயக்குனரிடம் வலை பாதித்த மீனவர்கள் நாகமுத்து, ஆனந்தன், சங்கர், மற்றும் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் , குமார்  தெரிவித்தனர்.

இன்று சட்டமன்ற அமைச்சர் அலுவலகத்தில் நிவாரண உதவி ‌ பெற மீனவர்கள் புறக்கணித்து செல்லாததால்  சட்டமன்றத்தில் இருந்து காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 11 மீனவர்களையும் வீடு வீடாக காலாப்பட்டு போலீசார் ஹரிஷ் பத்தாயிரம் காசோலை வாங்க அழைத்தார். இப்படி கூப்பிட்ட போலீசாரிடம் வலையிழந்த மீனவர் ஆனந்தன் நிவாரண உதவியை சரியான கணக்கிட்டு கொடுக்கவில்லை அதுவும் அரசு உதவி போல எங்களை சட்டசபைக்கு அழைப்பது ஏன்? அந்த நிதியை எங்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் வந்து கொடுக்கட்டும். மேலும் அந்தப் பைப்லைன் உத்தரவுபடி இதுவரை எடுக்கப்படவில்லை அது குறித்து புதுச்சேரி அதிகாரிகளும் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 
இதற்கு பதில் சொல்ல முடியாமல் போலீசார் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்து திரும்பி சென்று விட்டார். 

இன்று 25ஆம் தேதி  சங்கம் சார்பில் தீர்ப்பாயத்தின் உத்தரவை விலை பேசும்  அவல நிலையை தடுத்து உடனடியாக உத்தரவுப்படி கழிவுநீர் குழாய்களை வெளியே எடுத்து பாதித்த மீனவர்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்  என சுற்றுச்சூழல் அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. காலாப்பட்டில் கழிவு நீர் குழாய்  விவகாரம்  பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The fishermen who rejected relief aid returned with disappointment the officials


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->