மின்துறை தனியார் மயமாக்கப்படாது..பாஜக மாநில தலைவர் சொல்கிறார்!
The electricity sector will not be privatized says the BJP state president
காங்கிரஸ் கட்சி கனவு கூட காணக்கூடாது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் முதலமைச்சராக ரங்கசாமி இருப்பார் என பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து வரம்பு மீறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்வதை கண்டித்து பிஜேபி மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் காங்கிரஸ் அலுவலகம் நோக்கி கண்டன பேரணியில் அமைச்சர் ஜான் குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள்- கல்யாண சுந்தரம், சாய் சரவணன் குமார், தீப்பாய்ந்தான், செல்வம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது .முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விரைவில் மிகப்பெரிய அளவில் பாஜக சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது.
மக்கள் விரும்பும் வகையில் அமைதியான ஆட்சி புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி கனவு கூட காணக்கூடாது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் முதலமைச்சராக ரங்கசாமி இருப்பார்.
சாதாரண வியாபாரியான தன்னை கட்சியின் தலைவராக்கிய பெருமை பிரதமர் மோடியை சேரும்.. காங்கிரஸ், திமுகவில் தலைவராக முடியுமா???மின்துறை தனியார் மயமாக்கப்படாது என கூறினார்.
English Summary
The electricity sector will not be privatized says the BJP state president