அரசு பேருந்தில் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்டு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு அரசு பேருந்து சென்ற நிலையில், டிரைவா் சதாசிவம் என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். அப்பொழுது  அவர் ஒரு கையில் செல்போன் உடனும், மற்றொரு கையில் ஸ்டீயரிங் பிடித்திக்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உணராமல்  நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டி உள்ளார்.

இதனை பார்த்து பயத்தை அறிந்த பயணி ஒருவர், ஓட்டுநர் 1 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டிய நிலையில், பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பதிவு அனைவரிடமும் வேகமாக பரவியது.

இந்நிலையில், போக்குவரத்து கழக திருப்பூர் மாவட்ட மண்டல மேலாளர் சிவக்குமார் இதையடுத்து டிரைவர் சதாசிவத்தை சஸ்பெண்டு செய்து விட்டார், மேலும் பேருந்தை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனை பாக்கெட்டில் வைக்காமல் கண்டக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.

பின்னர் அவசரமாக யாராவது தொடர்பு கொண்டு பேசினால் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு பேச வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பேருந்தை ஓட்டும்போது போன் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The driver who drove while talking on the cell phone in the government bus was suspended


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->