சேலத்தில் போயிங்க் விமான பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம்..! 1000 பேருக்கு வேலைவாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


முதல் முறையாக போயிங்க் விமானத்தின் முக்கிய பாகங்களை தமிழகத்தில் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த பரிமாற்றம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

சேலத்தில் அமைந்துள்ள சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், போயிங் விமான பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் இந்திய போயிங்க் நிறுவனம் செய்து கொண்டது.

இந்த நிகழ்வு தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. மேலும், 2 வருடத்தில் ஓசூரில் சிவில் ஏர்போர்ஸ் உற்பத்தியை புதிதாக தொடங்கவும் சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், சேலத்தில் உள்ள தற்போதைய உற்பத்தி கூடத்தையும் 50 ஆயிரம் சதுர அடி அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிகு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The contract was signed to manufacture the main parts of the Boeing aircraft in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->