கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்- சீமான் காட்டம்! - Seithipunal
Seithipunal


கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர். மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்கள் செய்த தவறு என சீமான் கூறியுள்ளார்.

300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு  அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது . இதையடுத்து போராட்டம் நடத்திய  தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நேற்று  இரவு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் வேளச்சேரி திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;“கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர். மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்கள் செய்த தவறு. சென்னை மாநகராட்சியை தூய்மைப்படுத்துவது தனியார் நிறுவனத்தின் வேலையா?

அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கிறார்கள். தூய்மைப்பணி தனியாரிடம் செல்லும்போது அரசு ஏன் இதெல்லாம் வழங்குகிறது? அனைத்தும் கொடுக்கும் அரசாங்கம், நிரந்தர வேலையையும் கொடுத்துவிடலாமே.” இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister is watching a movie while the people fighting for wages are not being cared for Seemans criticism


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->