ரெஸ்டோ பார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் -நாராயணசாமி பேட்டி!
The CBI should investigate the murder case of the student at the restobar Narayanasamy interview
ரெஸ்டோ பார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: ரெஸ்டோ பார்கள் காவல்துறை, கலால் துறை உதவியுடன் சட்ட விரோதமாக அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நள்ளிரவு வரை செயல்படுகின்றன.
கலால்துறை மற்றும் காவல்துறையினர் கையூட்டு பெற்று கொண்டு ரெஸ்டோ பார் உரிமையாளர்களுக்கு அடிமை போல உள்ளனர்,ஓஎம்ஜி ரெஸ்டோ பாரில் சென்னை மாணவர் கொலையில் வழக்கு பதிவு செய்ய பெரிய கடை காவல் நிலையம் போலீசார் தாமதித்தது ஏன்?
புகார் கொடுத்தவர்களை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மிரட்டி உள்ளார்...ரெஸ்டோ பாரின் உரிமையாளர்களில் ஒருவர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்- அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும்;மக்கள் தொகைக்கு ஏற்ப ரெஸ்டோ பார்கள் திறக்கப்படும் என மமதையுடன் முதலமைச்சர் ரங்கசாமி பேசுவதா?
சுற்றுலா என்ற பெயரில் மக்களை காவு வாங்கின்ற வேலை நடந்து வருகின்றது-கலாச்சாரம் சீரழிந்து வருகிறதுமண்ணாடிபட்டு கிராம தொகுதியில் 7க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்களை திறந்தது தான் அமைச்சர் நமச்சிவாயத்தின் சாதனை
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பினாமிகள் தான் ரெஸ்டோ பார்களை நடத்தி வருகின்றனர் மாணவர் கொலை வழக்கை காவல்துறை திட்டமிட்டு குழி தோண்டி புதைக்க பார்க்கிறது..இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்
எளிய முதல்வரான ரங்கசாமிக்கு ஓன்றரை கோடி ரூபாய் கார் வாங்க பணம் எப்படி வந்தது?அவருக்கு அந்தக் காரை பரிசளித்தது யார்? குப்பை வாரும் டெண்டருக்கு 19 வருடம் கொடுத்த போதே சந்தேகம் வந்ததுகாமராஜரின் பெயரை சொல்ல முதலமைச்சர் ரங்கசாமிக்கு தகுதி இல்லை
புதுச்சேரியில் இளம் பெண்கள் விதவை ஆவதற்கு முதலமைச்சர் ரங்கசாமியே காரணம் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களின் அனுமதி ரத்து செய்யப்படும்
என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
English Summary
The CBI should investigate the murder case of the student at the restobar Narayanasamy interview