42 தமிழக கட்சிகள் உள்பட 476 பதிவு செய்யப்பட்டு, அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் தேர்தல் ஆணையம்..!
Election Commission to remove 476 registered but unrecognized political parties including 42 Tamil Nadu parties
பதிவு செய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகளை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 06 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறிய பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு அதனை அரசியல் கட்சி பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
குறித்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. தற்போது பட்டியலில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2854 என்பதில் இருந்து 2520 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் 02-வது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்குவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 30 மாநிலங்களில் நீக்கப்படவுள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எத்தனை என்ற பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட, ஆனால், அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எண்ணிக்கை 121 என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா அங்கீரிக்கப்படாத அரசியல் 44 கட்சிகள் உள்ளது. 03-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு மொத்தம் 42 பதிவு செய்யப்பட்ட, ஆனால், அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருக்கின்றன. 04-வது இடத்தில் டில்லியில் 41 கட்சிகளும், 05-வது இடத்தில் மத்திய பிரதேசம் 23 கட்சிகளும் உள்ளன. நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா மற்றும் சண்டிகரில் தலா ஒரேயொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி நீக்கப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
English Summary
Election Commission to remove 476 registered but unrecognized political parties including 42 Tamil Nadu parties