புற்றுநோய் கண்டறிவதற்கான திட்டம் ..அமைச்சர்கள்  மா.சுப்ரமணியன்,நாசர் தொடங்கி வைத்தனர்!   - Seithipunal
Seithipunal


புற்றுநோய் கண்டறியும் திட்டம்  ரூ.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தின் தொடங்கி விழாவில் பெண் சுகாதார தன்னார்வலர்களிடம் புற்றுநோய் கண்டறிவதற்கான அழைப்பிதழ்களை  அமைச்சர்கள்  மா.சுப்ரமணியன்,நாசர் ஆகியோர் ஒப்படைத்தார்கள். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர்கள் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம்,  திருப்பாச்சூர் துணை சுகாதார நல வாழ்வு மையத்தில் சமுதாய அளவிலான
புற்றுநோய் கண்டறியும் திட்டம்  ரூ.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தின் தொடங்கி விழாவில் பெண் சுகாதார தன்னார்வலர்களிடம் புற்றுநோய் கண்டறிவதற்கான அழைப்பிதழ்களை ஒப்படைத்தார்கள். 

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அரசு முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத் துறை இயக்குநர் டி.எஸ். செல்வ விநாயகம், கூடுதல்  இயக்குநர்/இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவக்  கல்லூரி முதல்வர் ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகர் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The cancer detection program has been inaugurated by Ministers M Subramanian and Nassar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->