பிரபல செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடங்கியது..காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் வலைதள கணக்கு இந்தியாவில், தடை செய்யப்பட்டு உள்ளது.

உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ், இந்தியாவில் அதன் "எக்ஸ் (முன்பு ட்விட்டர்)" கணக்கு தடைசெய்யப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், பேக்ட் செக், ஆசியா மற்றும் சீனா போன்ற துணை கணக்குகள் இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டிருந்தாலும், முக்கியக் கணக்கு அணுகமுடியாத நிலையில் உள்ளது.


இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது:"எங்கள் தரப்பிலிருந்து ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கை தடை செய்ய எந்தத் தீர்மானமோ அல்லது கோரிக்கையோ விடப்படவில்லை. எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இதனை சரி செய்ய முயற்சி செய்கிறோம். விரைவில் கணக்கு மீண்டும் செயல்படும்."

கடந்த மே மாதம் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, சமூக வலைதளங்களில் பல கணக்குகள் முடக்கப்பட்டன. அப்போது ராய்ட்டர்ஸ் கணக்கையும் தடை செய்ய வேண்டும் என சில தரப்புகள் வலியுறுத்தினாலும், அதற்கான கட்டாய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனினும் தற்போது, எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், அந்த காலத்திலான கோரிக்கையை தற்போது செயல்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, "உள்ளூர் சட்டம் அல்லது நீதிமன்ற உத்தரவு" அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், சரியான காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, மத்திய அரசு, ஏன் தடை செய்யப்பட்டதென்று எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் அரசின் கோரிக்கையாக உள்ளது.

தனிப்பட்ட ராய்ட்டர்ஸ் கணக்கு தடை செய்யப்பட்டாலும், அதன் பிற துணை எக்ஸ் கணக்குகள்ReutersTechNews,ReutersFactCheck,ReutersAsia,ReutersChina,அனைத்தும்இந்தியாவில்தொடர்ந்துஇயங்கிக்கொண்டிருக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The account of the popular news organization X has been locked What is the reason?


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->