கவர்னருக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி பதில் ! - Seithipunal
Seithipunal


கவர்னருக்கு எதிரான மனு மீதான விசாரணையில் ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பான வழக்கின் முடிவு தெரிந்த பிறகு விசாரிக்கலாம் என்று  சுப்ரீம் கோர்ட்டு பதிலளித்துஉள்ளது.

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, உடற்கல்வியில், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா  சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இவ்வாறு அனுப்பி வைத்ததை ரத்துச் செய்யக் கோரியும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி, டி.ஹரீஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மசோதாவுக்கான காலக்கெடு விவகாரத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார். தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இந்த வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petition against the Governor Supreme Court gives a shocking response


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->