8-வது ஊதியக்குழு பலன்களை உடனடியாக வழங்கவேண்டும்..அனைத்து துறை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!
The 8th wage board benefits should be provided immediately All department employees union insists
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 8-வது ஊதியக்குழு பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்டம்தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் தி.கா.ரமேஷ், தலைமையில் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில கௌவரவத்தலைவர் சி. ராஜவேலு, கலந்து கொண்டார்.
இதில் 1. மத்திய அரசு பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 8-வது ஊதியக்குழு அமைத்து அதன் பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உள்ளது. அதுபோல தமிழக அரசும் உடனடியாக 8-ஊதியக்குழு அமைத்து 01.01.2026 முதல் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க வேண்டும் .
2. தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதில்லை. அதற்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் (அ) தினக்கூலி அடிப்படையில் பதவிகள் நிரப்பப்படுகிறது. அந்த பதவிகளை நிரப்புவதற்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கப்பட வேண்டும்.
3. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அகவிலைப்படியும் மத்திய அரசு வழங்கும் தேதியில் தமிழக அரசு வழங்குவதில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும்.
4. மாவட்டத்திலுள்ள பேரூராட்சி தினக்கூலிப் பணியாளர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் ரூ.500/-தினக்கூலி வழங்கப்படுகிறது. இதேபோல அனைத்து பேரூராட்சிகளிலும் வழங்க வேண்டும்.
5.தோட்டக்கலைத்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
6. அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
7. தமிழக அரசுப் பணியாளர்களுக்குநிலுவையிலுள்ள சலுகைகள்பற்றிபேச்சுவார்த்தை நடத்த எந்த சங்கத்தையும் அழைத்து பேசவில்லை. இது சம்பந்தமாக அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும்.
8. தமிழக அரசு தற்போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அவைகளைஅரசுமாற்றிக்கொண்டு ஒரு சில சலுகைகளையாவது உடனடியாக அளிக்க வேண்டும். இதில் ஒரு சில தீர்மானங்கள் குறித்து விவாதித்து நிறைவேற்றப்பட்டது.
English Summary
The 8th wage board benefits should be provided immediately All department employees union insists