அது சரியான முடிவு..ஊழல் அரசியல்வாதிகளை எச்சரித்த பிரதமர் மோடி!
That is the right decision Prime Minister Modi warned corrupt politicians
ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது.அது வீண் போகாது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த உறுதி நிறைவேற்றுப்பட்டுள்ளது.ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாரில் எந்த பெரிய திட்டமும் முடிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதில் மட்டுமே மும்முரமாக இருந்தனர்.பீகார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெற ராஷ்டிரிய ஜனநாயகக் கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.
ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே தனது வேலையை இழப்பார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு, சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டது, அரசாங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்தன.
தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால் ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.
இதன்மூலம் யாராலும் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது. யாரும் சிறையில் இருந்த படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும் என்று கூறினார்.
English Summary
That is the right decision Prime Minister Modi warned corrupt politicians