கமிஷன், திருட்டு, திமுக கோஷ்டி மோதல் | முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த செய்தி! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் திமுக கோஷ்டி மோதல் காரணமாக தூர் வாரும் பணி பாதிப்பு அடைந்துள்ளதாகவும், தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க கோரியும், காவிரி உரிமை மீட்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பெ. மணியரசன் தெரிவிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிக்காக ரூ.20 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்காலில் கடந்த மாதம் 27-ம் தேதி அமைச்சர்கள் நேரில் அங்கு வந்து பணியினை தொடங்கி வைத்தனர்.

தூர்வாரும் பணியினை பூதலூரைச் சேர்ந்த திமுகக்காரர் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவைச் சேர்ந்த இதே வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர், இந்த ஒப்பந்த வேலைக்கு தங்களுக்குக் குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என அவரை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். 

இந்த வாய்க்காலில் மொத்தம் 6 கி.மீட்டரில், இதுவரை 2 கிலோ மீட்டர் மட்டுமே தூர் வாரும் பணி முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு மற்றொரு பிரிவினர், அந்த வாய்க்காலை தூர் வாருவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லின் இயந்திரத்தை சேதப்படுத்தியதுடன், அதிலுள்ள முக்கியமான பாகங்களைத் திருடிச் சென்று விட்டனர். 

இது குறித்து வெண்ணாறு – வெட்டாறு பகுதி உதவிப் பொறியாளர், சிலரது பெயர்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 20-ம் தேதி பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுகவினர் தங்களின் தன்னலத்திற்காக இரு பிரிவுகளாகப் பிரிந்து சண்டைப் போட்டுக் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான அரசுத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார்கள். 3 அமைச்சர்கள் அங்கு தூர் வாரும் பணி தொடங்கி வைத்த அன்றிலிருந்து அவர்களுக்குள் கோஷ்டிச் சண்டை தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

எனவே, தமிழக முதல்வர், திமுகவினர் கமிஷன் கேட்டு கோஷ்டி சண்டை போடுவதைத் தவிர்க்கவும், தூர் வாரும் பணியினை அடுத்த மாதம் தண்ணீர் திறப்புக்குள் முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjai DMK clash issue


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->