அவசர சிகிச்சை நோயாளியாக விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா? தங்கர் பச்சான் கேள்வி! - Seithipunal
Seithipunal


திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை  எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்.

நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்! மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம். 

மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thangar bachan tvk vijay goverment


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->