சென்னையில் கிருஸ்துவ ஆலயங்களை குறிவைத்து சம்பவம் செய்த நெல்லை டேனியல்!
Thambaram Deniyal arrest
சென்னையில் கிருஸ்துவ ஆலயங்களை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நெல்லை டேனியல் என்பவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தாம்பரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை குறிவைத்து திருட்டு சம்பங்களில் ஈடுபட்ட நெல்லை டேனியல் என்பவனை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு கிழக்கு தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள பாத்திமா கிறிஸ்தவ ஆலயத்தின் மாதா சிலை திருடுபோனது. இந்த திருட்டு சம்பவம் குறித்து ஆலயம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் வசம் பதிவு செய்த போலீசார், ஆலயத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியின் முகத்தை கண்டறிய முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பதும், தாம்பரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டும் தெரியவந்தது.
இதனையடுத்து டேனியலை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து மூன்று சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் திருபோன மாதா சிலை குறித்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.