தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆசிரியர் தகுதி தேர்வு (TET EXAM)  தேர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில் நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 2.3லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் முறையாக கணினி வழியில் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது .

இந்த தேர்வுக்காக தனியார் பள்ளிகள், பொறியியல், கலை & அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி வகுப்புகள் தேர்வு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TET exam from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->