ஆடி அமாவாசை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்திற்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆடி அமாவாசை - பள்ளிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்திற்குத் தெரியுமா?

தமிழகத்தில் நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறித்து பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆடி அமாவாசை. இந்த நாளில் மக்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதன் காரணமாக, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வதற்கு செல்வார்கள். அதேபோல், ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tenksai tirunelveli and south districts school colleges holiday tomarrow for adi amavasai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->