தனியார் பங்களிப்புடன் சென்னை MTC-யில் 234 பணியிடங்கள் நிரப்ப டெண்டர் வெளியீடு!
Tender issued to fill 234 vacancies in Chennai MTC with private contribution
தமிழக அரசின் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் உதவியோடு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமனம் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 234 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தேர்வு செய்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமற்றப்பட உள்ளனர்.

ஏற்கனவே 500 ஓட்டுநர்கள் தனியார் மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதனையும் மீறி தற்போது தமிழக அரசு மேலும் 234 ஊழியர்களை பணியமர்த்த உள்ளது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tender issued to fill 234 vacancies in Chennai MTC with private contribution