கடலூர் : மாமாவோடு டிராக்டரில் சென்ற சிறுவன் - கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மாமாவோடு டிராக்டரில் சென்ற சிறுவன் - கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம்.!!

அரியலுார் மாவட்டத்தில் உள்ள தளவாய் கூடலுார்  கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். வெளிநாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரேகா. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் ரேகா மகன் வரதராஜனுடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த பெருமுளையில் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளர். வரதராஜனும் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ரேகாவின் தம்பி மணிகண்டன், புதிதாக வாங்கிய டிராக்டரில் நேற்று காலை தனபால் என்பவரின் வயலில் உழவு செய்வதற்காக சென்றுள்ளார். இந்த டிராக்டரை குழுமூரைச்  சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். 

இந்த டிராக்டரின் ஒரு பக்கத்தில் மணிகண்டன் அமர்ந்து கொள்ள, வரதராஜனும் தானும் வருவதாக அடம்பிடித்து ஏறி இன்னொரு பக்கத்தில் அமர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து டிராக்டர் வயல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வயலில் உள்ள ஒரு வரப்பில் ஏறி இறங்கியது. 

இதில் டிராக்டர் நிலை தடுமாறியதனால் வண்டியில் அமர்ந்திருந்த சிறுவன் வரதராஜன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது சிறுவனின் தலையில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் வரதராஜன் உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீஸார்  வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten years old boy died accident in cuddalore tittakudi


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal