இதுதான் உங்க சமூகநீதியை? திமுக அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த ஆசிரியர்கள்! பதறும் தலைநகரம்! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் கடந்த 10 நாட்களாக டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஆசிரியர்களுடன் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் அறிவித்து போராட்டத்தை தொடர்ந்தன . இந்லையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவிதித்தார்.  

இந்தக் குழு அரசிடம் 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுப்போம் என என தெரிவித்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்து தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் இன்று காலை திடீரென கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் டிபிஐ வளாகத்தில் இருந்து பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயுள்ள சமூக நலக்கூடங்களில் சிறை கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் போராட்டத்தை அங்கேயும் தொடர்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் "நாங்கள் அறவழில் தானே போராட்டம் நடத்தினோம். அதற்காக கைது செய்வீர்களா! இதுதான் சமூகநீதியா! நாங்க எல்லாம் 50 வயதை கடந்தவங்க, உங்க பெற்றோராக இருந்தால் இப்படி செய்வீர்களா!" என திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய ஆசிரியர்களை ஒரு குற்றவாளி போல சமுதாய கூடத்திற்குள் இழுத்து சென்று அடைத்தனர். இருப்பினும் ஆசிரியர்கள் ஜன்னல் வழியாக கைகளை நீட்டி அரசின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers are protest raising slogans against DMK govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->