'மருமகளே என் மகனிடம் பேசு' .. பள்ளி மாணவிகளிடம் அடாவடி செய்த  ஆசிரியை.. பணியிடை மாற்றம்.! - Seithipunal
Seithipunal


12ம் வகுப்பு மாணவியை மருமகளே என் மகனிடம் பேசு என வற்புறுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரததொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவரை மருமகளே என அழைப்பதோடு இரவு நேரத்தில் தனது மகனிடம் பேச வற்புறுத்தியுள்ளார். மேலும் மற்ற மாணவிகளிடமும் இரவு நேரத்தில் போன் செய்து தனது மகனிடம் பேச சொல்லியும், தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை மறுக்கும் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசி அவர்களிடம் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவிகளிடம் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் சாந்திப்பிரியா மாணவிகளிடம் ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியை சாந்தி பிரியாவை பணியிடை மாற்றம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher forced to talk son in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->