#சென்னை || பிப்.5ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! - Seithipunal
Seithipunal


வடலூர் ராமலிங்க அடிகளார் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், அதாவது தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளில் ஜோதி வடிவமாக கலந்தார்.

அதன் பிறகு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் வள்ளலார் அவர்களை அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர்.

ஜோதி திருவிழா வடலூரில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வள்ளலாரின் ஜோதி திருவிழா நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "வடலூர் ராமலிங்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அனைத்து விதமான பார்களும் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூட வேண்டும்.

அன்றைய தினம் சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை தவறும் பட்சத்தில் மதுபான விற்பனை விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac stores closed on 5th Feb in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->