டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,௦௦௦ ஊதிய உயர்வு, பகுதி உயர்வு அறிவிப்பு!
TASMAC Staff Salary Increment
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடக்கம் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அறிவிப்பு வெளியான மூன்று மாதங்கள் கடந்தும் ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் பின்நாள் அமலுடன் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவில், விதிமீறல்களின்றி பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் முழு ரூ.2,000 ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு விதியாக, மதுபாட்டிலை ரூ.10 அல்லது அதற்கு மேல் அதிகமாக விற்று ஒழுங்கு மீறலில் சிக்கிய 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 மட்டுமே உயர்வாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் உயர்ந்த ஊதியம் ஏப்ரல் மாதம் முதல் இரு நாட்களில் செலுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
English Summary
TASMAC Staff Salary Increment