4 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடல்.!
tasmac shop leave to four districts for cyclone
வங்கக்கடலில் நிலைவி வரும் மிக்ஜாம்' புயல் சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நாளை மதுபானக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tasmac shop leave to four districts for cyclone