கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் ஆண்டு அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? அமைச்சர் விளக்கம்!
TASMAC Minister Muthusamy statement
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தால் கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டுத்தொகை அறிக்கைகள் வெளியிடப்படாதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2016–17ஆம் நிதியாண்டுக்கான 34வது அறிக்கையே கடைசியானது. அதன் பிறகு எந்த ஆண்டளவு அறிக்கையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரவில்லை.
நிறுவனங்கள் சட்டப்படி, ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர செயல்பாடு மற்றும் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டியது கட்டாயம்.
தமிழ்நாடு மின் வாரியம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்கள் கூட சமீபத்திய நிதியாண்டுக்கான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளிக்கையில், “2023–24 நிதியாண்டு வரை டாஸ்மாக் ஆண்டு அறிக்கைகள் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2024–25 அறிக்கை தயாராகி வருகிறது. வெளியீடு ஏன் தேறியது என்பதை நான் பார்ப்பேன்” என்று தெரிவித்தார்.
English Summary
TASMAC Minister Muthusamy statement