சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு குறி...? ரகசியமாக போதை மாத்திரைகளை விற்ற 2 வாலிபர்கள் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பு செயல்பட்டு வருவதாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருநகர் ஆற்றோரச் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உலா வந்த இரு இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த பிரவீன்குமார் (19) மற்றும் பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 3,500 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் நடைபெற்ற விசாரணையில், கைதானவர்கள் மும்பை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சென்று போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து, உறவினர் வீடுகளில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அவற்றை நூதன யுக்திகளை கையாண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்து, பெருமளவில் சட்டவிரோத வருவாய் ஈட்டி வந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

target college students Chennai How 2 youths caught secretly selling narcotic pills


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->