#BREAKING || தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நான்காவது அலையின் வருகையை தவிர்க்க முடியாதது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து முக கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. முதலாவதாக டெல்லி அரசு இந்த விதிமுறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. டெல்லியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறும் பட்சத்தில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  தெலுங்கானா மாநிலத்திலும் முககவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிய வில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் முககவசம் அணிவது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் . மேலும் முகக்கவசம் அணிய வில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu will compulsory wear mask


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->